தனக்கே உரித்தான பண்பாட்டு மரபுரிமைகளுடன் தமிழர் பண்பாடுகளில் அறிவியல் சார்ந்த நோக்கை முதன்மைப்படுத்தும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வருடாந்தம் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது மரபு.
அதன்பால் 2021 ஆம் ஆண்டு மனமகிழ்ச்சிக்கான மாற்றத்தை உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விவசாயத்தின் உன்னத பெறுமானத்தையும், மன மகிழ்ச்சியையும் மாணவர்களினூடாக சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் பொங்கல் விழாவினை மத்திய கல்லூரிஅழகாக சிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.