Deputy Principal
Deputy Principal
Mrs. C.S.R. Selvagunalan
B.A, Dip.in.Ed, PGDEM,
M.Ed., SLPS I
பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி
எமது கல்லூரிக்கான இணையத்தளம் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்லூரியின் பிரதி அதிபராக நான் மிகவும் பெருமையும் மகிழ்வும் அடைகின்றேன். மெதடிஸ்த திருச்சபையினரால் 1816 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இன்று கல்வி வளர்ச்சியில் மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களிலும் சாரணியத்திலும் சிறந்து விளங்குவது நாம் பெருமைப்படும் விடயமாகும்.
பழம் பெருமை வாய்ந்த எமது கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு ஆளுமைகளையும் திறமைகளையும் வளர்ப்பதில் மிகவும் காத்திரமான பங்களிப்பினை வகிப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எமது கல்லூரியின் வரலாறு, செயற்பாடுகள், பெறுபேறுகள், தேவைகள் என்பவற்றை தாங்கி நிற்கும் இந்த இணையத்தளமானது தகவல்களை இற்றைப்படுத்துவதனூடாக கல்லூரியின் பெருமைகளையும் சிறப்புக்களையும் உலகிற்கே பறைசாற்றுவதுடன் எதிர்காலத்தில் மிகப் பெரு விருட்சமாக எமது கல்லூரி மிளிர இவை உதவும் என்பதில் ஜயமில்லை. இம் முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
‘மத்தியின் மணிக்கொடி நித்தியம் நிலைக்கும்’
திருமதி C.S.R. செல்வகுணாளன்,
பிரதி அதிபர்,
யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.