“Battle of the North 50 Overs Victory Cup”
Battle of the North 50 Overs Victory Cup was handed over to JCC Principal Dr. S K Elilventhan by the JCC Captain & Team … Today the event was held at Romaine Cooke Hall of JCC.
- Published in Achievement, Gallery, News, School, Sports
“தரம் 5 இற்கான பெற்றோர் சந்திப்பு இரண்டாம் கட்டம்”
மாணவர் களின் கற்றலை ஊக்குவிக்கவும், புலமைபரிசில் பரீட்சையில் சித்தி வீதத்தை அதிகரிக்கவும், மேலதிகவகுப்புக்கள் நடாத்துதல், செயலமர்வுகள், பயிற்சி பாசறைகள் நடாத்துதல், பற்றிய விபரங்கள், மாணவரின் சுயகற்றல், சித்திஅடைவதன் அவசியம் பற்றிய கலந்துரையாடல் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
“வடக்கின் பெரும்போர் -2022”
நடைபெற்ற வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படுகின்ற யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் புனித பரியோவான் கல்லூரியானது டெஸ்ட் தொடரையும் யாழ் மத்திய கல்லூரி அணியானது ஒருநாள் தொடரையும் வெற்றி கொண்டது.
- Published in Achievement, Gallery, News, School, Sports
“ஒரு கோடி ரூபாய்கள் பெறுமதியான நிலையான வைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம்”
பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் ஒரு கோடி ரூபாய்கள் பெறுமதியான நிலையான வைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் இன்று நடைபெற்றது இந்த நிலையான வைப்புத் திட்டத்தின் நோக்கங்களாக கல்வியிலும் விளையாட்டிலும் மாணவர்களை முன்னேற்றுதல், கல்லூரியின் நிறுவனர் தினம், சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் போன்றவற்றை நிகழ்த்துதல், கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பழைய மாணவர் சங்கத்தின் சேவைகளை கல்லூரிக்கு தடையின்றி வழங்குதல் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுதல்.
அபாயகரமான ஒளடதங்கள் தொடர்பான…
தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு அச்சபையின் யாழ்மாவட்ட உறுப்பினர்களினால் கல்லூரி முதல்வர் கலாநிதி S. K எழில்வேந்தன் அவர்களின் தலைமையில் இன்று தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டினுடைய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன்….
இன்றைய தினம் கல்லூரி முதல்வரின் தலைமையில் பிரான்ஸ் நாட்டினுடைய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் திரு K. முத்துக்குமார் அவர்களினால் 19 சாரணிய மாணவர்களிற்கான சீருடை இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் மற்றும் சாரணிய பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்கமானது எமது கல்லூரிக்கு ஆண்டுதோறும் விளையாட்டு உபகரணங்களையும் 15 வயது பிரிவின்கீழ் விளையாடுகிற துடுப்பாட்ட அணியின் பயிற்றுவிப்பாளருக்கான ஊதியத்தினையும் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகின்றது . அத்துடன்
Pon. Vipulananthan (Vipul) Memorial Awarding ceremony
Rs.1.68 millions valued “Pon.Vipulananthan Memorial Scholarship” for outstanding students in G.C.E.A/L -2023 sponsored by JCC 1987 A/L Alumni on 26.01.2022 at Thanthai Selva Auditorium Presided by Dr.S.K. Ellilventhan Chief Guest Dr.T.Mangaleswaran Vice-Chancellor University of Vavuniya.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விழிப்புணர்வும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும்.
எமது பாடசாலையில் இவ்வருடம் போது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள கற்றலுக்கான விழிப்புணர்வும் உத்வேகமும் தேவை என இனங்காணப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தனித்தனியாக வளவாளர்கள் வருவிக்கப்பட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலையின் முதல்வர் கலாநிதி S. K எழில்வேந்தன் ஐயா தலைமையில் இடம்பெற்றது. செயலமர்வின் போது Educare அமையத்தின் பிரதிநிதியும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் COVID-19 நோய் நிலைமையினால் நடைமுறைச்சிக்கலிற்குட்பட்ட மாணவ ஆக்கத்திறன் சார்ந்து தூண்டுகின்ற அனைத்து வழமையான செயற்பாடுகளும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
பாடசாலைகளில் COVID-19 நோய் நிலைமையினால் நடைமுறைச்சிக்கலிற்குட்பட்ட மாணவ ஆக்கத்திறன் சார்ந்து தூண்டுகின்ற அனைத்து வழமையான செயற்பாடுகளும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக …..
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தேசிய அளவிலான துடுப்பாட்ட போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட பிரிவு 3 A இற்கான இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான வெற்றி கோப்பையையும், வடமாகாணத்தில் 2021 ஆண்டிற்கான துடுப்பாட்டத்தில் சிறந்த அணிக்கான முதல் பரிசினை பெற்றுக்கொண்ட வெற்றி கோப்பையும் பாடசாலையின் அணி வீரர்களும் விளையாட்டு குழாமும் இணைந்து பாடசாலை முதல்வரிடம் வெற்றிக் கோப்பையை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பொற்கிளிகளை வழங்கி
- Published in Achievement, Gallery, News, Sports