யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக …..
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தேசிய அளவிலான துடுப்பாட்ட போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட பிரிவு 3 A இற்கான இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான வெற்றி கோப்பையையும், வடமாகாணத்தில் 2021 ஆண்டிற்கான துடுப்பாட்டத்தில் சிறந்த அணிக்கான முதல் பரிசினை பெற்றுக்கொண்ட வெற்றி கோப்பையும் பாடசாலையின் அணி வீரர்களும் விளையாட்டு குழாமும் இணைந்து பாடசாலை முதல்வரிடம் வெற்றிக் கோப்பையை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பொற்கிளிகளை வழங்கி
- Published in Achievement, Gallery, News, Sports
“யாழ் மத்திய கல்லூரியின் பிரபல பொருளியல் ஆசிரியை ஓய்வு பெறுகிறார்”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பொருளியல் ஆசிரியராக கடமையாற்றி வரும் செல்வி புண்ணியமூர்த்தி தனலட்சுமி 35 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து தன்னுடைய 60வது வயதில் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் Romaine Cooke மண்டபத்தில் இவருக்கான சேவைநலன் பாராட்டு விழா ஆசிரியர் வட்டத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிலே உயர்தர வர்த்தகத் துறையின் விஷேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது .தன்னுடைய கல்விச்சேவையிலே வறிய மாணவர்களுக்கான பொருளாதார வசதிகளையும் அவர்களுக்கான
யாழ் மத்திய கல்லூரி இறுதியில்…
பொலநறுவை றோயல் கல்லூரியினை pre-Quater போட்டியிலும், சென் ஜோசப் வற்றளை அணியினை காலிறுதியிலும் மற்றும் இன்று ரணசிங்க மத்திய கல்லூரியினை அரையிறுதியிலும் வீழ்த்தி தன் வரலாற்றில் மத்திய கல்லூரி முதல்தடவையாக Div3.1 இறுதி போட்டியில் நுழைந்தது.. இப் போட்டி வெல்வதற்கு ஒரு வருட காலமாக என்னோடு பயணித்த பாடசாலை சமூகத்திற்கும், அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களிற்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.. Jaffna central won the toss elected
- Published in Achievement, Gallery, News, Sports
The Prefects Investiture Ceremony -2020/21
The Prefects Investiture Ceremony -2020/21 of JCC, was held at the school’s Thanthai Selva hall recently. The school Principal Dr. SK Elilventhan presided over the event. They awarded prefects with badges. The prefects took the service oath at the event. Staff Advisor of Board of Prefects, Deputy and vice-principals, teachers, and students were present.
“2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான பிரிவுபசார நிகழ்வும் பொற்கிழி வழங்கும் நிகழ்வும் “
2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாண கௌரவிப்பு விழா பொற்கிழி வழங்கும் நிகழ்வினையும் யாழ்மத்தியகல்லூரி வெகு விமர்சையாக கொண்டாடியது.
இன்று ஓய்வுபெறுகின்ற பிரதி அதிபர் திரு. R. திரவியநாதன் ஐயா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு
மத்திய கல்லூரி பல மேதமை பொருந்திய தலைமைத்துவம் கொண்ட ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த தேசிய கல்லூரி ஆகும். இவ் தலைமைத்துவ ஆளுமைகளில் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் வகிபாகத்தில் தன்னை உள்ளுறுத்தி அர்ப்பணிப்புடன் பணிசெய்த எம்முடைய பிரதி அதிபர் திரு. இ.திரவியநாதன் என்றும் பாராட்டுக்குரியவர் யாழ்ப்பாணத்தின் பெருமை பொருந்திய தீவகப்பரப்பில் குறிப்பாக நயினாதீவில் பிறந்து அங்கேயே ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் முடித்துக்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தினையும், தன்னுடைய முதுகலைமாணி பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும்
“எமது கல்லூரியின் ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களின் 60வது ஆண்டு மணி விழாவும் பிரியாவிடை நிகழ்வும்”
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் சேவை என்பது இறை சக்திக்கு நிகராகப் போற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 33 வருடங்கள் ஆசிரிய சேவையை வழங்கி நிறைவாக பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்ற விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களை வாழ்த்தி இச்செய்தியினை வழங்குவதில் அகமகிழ்ந்து கொள்கின்றேன் மாணவனை வேலை உலகிற்கு ஆற்றுப் படுத்துவதில் விஞ்ஞான பாடத்திற்கு முக்கிய பங்கு உண்டு ஆசிரியர் விஞ்ஞான பாடத்தை திறம்பட கற்பித்து சிறந்ததொரு மாணவ சமுதாயத்தை உருவாக்கியுள்ளார்
“கல்வி தொடர்பான சமூக இடைவெளியுடன் கூடிய திட்டமிடல்களும் கலந்துரையாடல்களும்”
Covid-19 நோய் நிலைகளின் காரணமாக கல்வி முன்னெடுத்தல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் பாடசாலை தொடர்ந்தும் செயற்படவேண்டிய தேவைபாட்டில் உள்ளது. இவை தொடர்பான திட்டமிடல்களை ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும் ஒத்துழைப்புடன் கல்லூரி முன்னெடுத்துச் செல்கின்றது. இன்றைய தினம் மாணவர்களது கல்வி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வினவுகின்ற வகையில் தந்தை செல்வா அரங்கில்சமூக இடைவெளியை பேணி மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கலந்துரையாடினார்.
“பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்கிவைப்பு”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு K. முத்துக்குமார் ( பிரான்ஸ்) அவரது தாயாரின் நினைவாக பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக இலங்கை முழுவதுமாக உள்ள பாடசாலைகளுக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை ( கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இலவசமாக வழங்கினார். அந்த வகையில் 19.01.2021 அன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் வினாத்தாள்கள் வழங்குகின்ற நிகழ்வு கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. வழங்கி
“The emblem of our college opening ceremony”
The emblem of our college of majesty and honor was displayed in a very majestic manner in the romaine hall of our college in the pre-1990s. The Romain Hall was completely destroyed in the ensuing war. After that, only the small emblem of the college was fitted. Mr. Muralitharan, an alumnus of our college