மாதாந்த செயற்பாட்டு அறிக்கை 2023 – கார்த்திகை மாதம்
- Published in Achievement, News
க.பொ.த உ/த 2025 இற்கான 80 இலட்சங்கள் பெறுமதியான புலமைப் பரிசில் திட்டங்கள்.
- Published in Acadamic, Achievement, News
அமைச்சர்கள் வருகையும் உடற்பயிற்சிக் கட்டடத் திறப்பு விழாவும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிறசிக் கட்டடத் திறப்பு விழா 11.10.2023 அன்று கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சமூகத்துடன் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சமூகமும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊடற் பயிற்சிக் கட்டடத்
தொழினுட்பப்பிரிவு திறன் பலகைத் திறப்புவிழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தொழினுட்பப்பிரிவவுக்கான திறன் பலகைத் (Smart Panel) திறப்புவிழா 26.10.2023 அன்று காலை 7.40 மணியளவில் கல்லூரி முதல்வர் திரு.சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக நோதேன் சென்ரல் வைத்தியசாலையின் இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்களும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர்கள்,
- Published in News, Resources, School, Technology
சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் ஆசிரியர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலையணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலைத்தேச வாத்ததிய இசையுடன் தந்தை செல்வா
சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் சிறுவர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறுவர் தினம் 04.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை ஆசிரிய வட்டம் பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. அகவணக்கத்துடன் ஆரம்பமான சிறுவர் தின நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வரின் வாழ்த்துத்துரை இடம்பெற்றது. தனது வாழ்த்துரையில் மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் பொறுப்புடனும் செயற்படவேண்டும் என்றும்; மாணவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்: மாணவர்கள் மகிழ்வாகக் கற்பதற்கான சூழலை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பது குறித்துப்
ஸ்மாட் வகுப்பறைகள்
“வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற வேண்டும் – புதிய கல்விக் கொள்கை” க்கு அமைவாக அதன் ஒரு பகுதியாக, (11.09.2023) அன்று உயிரியல் உயர்தரபிரிவு வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுசரனையை 1973 AL 12C உயிரியல் வகுப்பால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேனல்(0.53 மில்லியன்), நாற்காலிகள் மற்றும் புதுப்பித்தல் – *மொத்தம் 0.6 மில்லியன். * நடைபெற்ற தொடக்க விழாவில் திருமதி ஜாய் மகாதேவன்-(ஓய்வுபெற்ற நீதிபதி) திரு சாந்தசொரூபன்- (ஓய்வுபெற்ற வணிக வங்கி மேலாளர் )
- Published in Advanced Level, News, Physical Recourse
மாணவர்கள் கௌரவிப்பு
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர 2022 பரீட்சைப் பெறுபேற்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர் பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு 2023.09.12 காலை கல்லூரி மைதானத்தில் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த கொ.சஞ்சய்(3A), வி.அனோஜன்(3A), சி.முகமட் சஹ்ரான்(2AB), சி.நிரூஜன்(2AB), ச.முகமட் ஆசிக்(A2B), யூ.நிகேஷ; பெல்சியன்(ABC), ஞா.கனிஸ்ரன்(3B) ஆகிய மாணவர்கள் வணிகத்துறையிலும் ரா.கிருபாகரன்(2AB), அ.கனிஸ்ரன்(2AB), சி.தமிழழகன்(B2C) ஆகிய மாணவர்கள் பொறியியல் தொழினுட்பத்துறையிலும் ந.கபீசன்(யA2B) கணிதத்துறையிலுமாக பதினொரு மாணவர்கள்
- Published in Achievement, News, School
சிறப்பாக நடைபெற்ற யாழ் மத்தியின் ஸ்தாபகர் தின விழாவும் பரிசில் தினமும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 207 வது ஸ்தாபகர் தினமும் 2022 கல்வியாண்டுக்கான பரிசில் தினமும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை எமது கல்லூரியில், கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு புனித பீற்றர் மெதடிஸ்த தேவாலயத்தில் மெதடிஸ்த குரு முதல்வர் அருட்பணியாளர் ஞானரூபன் அவர்கள் தலைமையில் இறைவழிபாடும் ஸ்தாபகர் தின நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி சங்க
- Published in Achievement, News, School