அமைச்சர்கள் வருகையும் உடற்பயிற்சிக் கட்டடத் திறப்பு விழாவும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிறசிக் கட்டடத் திறப்பு விழா 11.10.2023 அன்று கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சமூகத்துடன் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சமூகமும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஊடற் பயிற்சிக் கட்டடத்
தொழினுட்பப்பிரிவு திறன் பலகைத் திறப்புவிழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தொழினுட்பப்பிரிவவுக்கான திறன் பலகைத் (Smart Panel) திறப்புவிழா 26.10.2023 அன்று காலை 7.40 மணியளவில் கல்லூரி முதல்வர் திரு.சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக நோதேன் சென்ரல் வைத்தியசாலையின் இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்களும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர்கள்,
- Published in News, Resources, School, Technology
சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் ஆசிரியர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலையணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலைத்தேச வாத்ததிய இசையுடன் தந்தை செல்வா
சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் சிறுவர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறுவர் தினம் 04.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை ஆசிரிய வட்டம் பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. அகவணக்கத்துடன் ஆரம்பமான சிறுவர் தின நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வரின் வாழ்த்துத்துரை இடம்பெற்றது. தனது வாழ்த்துரையில் மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் பொறுப்புடனும் செயற்படவேண்டும் என்றும்; மாணவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்: மாணவர்கள் மகிழ்வாகக் கற்பதற்கான சூழலை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பது குறித்துப்