டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு
தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 16.05.2023 இடம்பெற்றது.
மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மணிவிழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் மனதில் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர் மனங்களிலும் மதிப்புக்கும் புகழுக்கும் உரியவராக விளங்கும் செல்வி கயிலாசப்பிள்ளை கலாதேவியவர்கள் முப்பத்தைந்து வருடகால ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரிய வட்டத்தால் மணிவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது 2023.05.11 அன்று வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கிலே மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரிய வட்டத் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களாலும் ஆசிரிய வட்டத்தினராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்புச் செய்யப்பட்டார். கல்லூரியின் பிரதியதிபர்
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது 2023.04.22 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணிக்கு றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. கல்லூரியின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவராக செல்வன்.சதானந்தன் வருண்சர்மா கல்லூரி முதல்வரால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிர்வாக சபை மாணவமுதல்வர்களுக்கும் முதல்வர் சின்னம் சூட்டி கௌரவித்தார். தொடர்ந்து சிரேஷ்ட மாணவ முதல்வருக்கான சின்னங்களை பிரதி