“2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான பிரிவுபசார நிகழ்வும் பொற்கிழி வழங்கும் நிகழ்வும் “
2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாண கௌரவிப்பு விழா பொற்கிழி வழங்கும் நிகழ்வினையும் யாழ்மத்தியகல்லூரி வெகு விமர்சையாக கொண்டாடியது.
இன்று ஓய்வுபெறுகின்ற பிரதி அதிபர் திரு. R. திரவியநாதன் ஐயா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு
மத்திய கல்லூரி பல மேதமை பொருந்திய தலைமைத்துவம் கொண்ட ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த தேசிய கல்லூரி ஆகும். இவ் தலைமைத்துவ ஆளுமைகளில் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் வகிபாகத்தில் தன்னை உள்ளுறுத்தி அர்ப்பணிப்புடன் பணிசெய்த எம்முடைய பிரதி அதிபர் திரு. இ.திரவியநாதன் என்றும் பாராட்டுக்குரியவர் யாழ்ப்பாணத்தின் பெருமை பொருந்திய தீவகப்பரப்பில் குறிப்பாக நயினாதீவில் பிறந்து அங்கேயே ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் முடித்துக்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தினையும், தன்னுடைய முதுகலைமாணி பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும்
“இணையத்தள பயன்பாட்டிற்காக பழைய புகைப்படங்களை சேகரித்தல்”
200 ஆண்டுகளை கடந்து எமது கல்லூரியானது கல்வியிலும்,விளையாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மேதைகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கியிருப்பது பலரும் அறிந்த விடயமே, அதேபோன்று விளையாட்டுத் துறைக்கான ஒரு தனியான இடத்தினையும் எமது கல்லூரியானது பிடித்திருப்பதையும் எம்மால் கவனிக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இக் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள், கல்லூரியுடன் தொடர்புபட்டவர்கள் அனைவருக்கும் வெளிப்படைத் தன்மையுடன் ஒரு வேண்டுகோளாக முன் வைப்பது யாதெனில் “இணையத்தள பயன்பாட்டிற்காக” தாங்கள் ஏலவே இக்கல்லூரியில் படிக்கின்ற, வேலை செய்த, காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
- Published in News