“எமது கல்லூரியின் ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களின் 60வது ஆண்டு மணி விழாவும் பிரியாவிடை நிகழ்வும்”
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் சேவை என்பது இறை சக்திக்கு நிகராகப் போற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 33 வருடங்கள் ஆசிரிய சேவையை வழங்கி நிறைவாக பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்ற விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களை வாழ்த்தி இச்செய்தியினை வழங்குவதில் அகமகிழ்ந்து கொள்கின்றேன் மாணவனை வேலை உலகிற்கு ஆற்றுப் படுத்துவதில் விஞ்ஞான பாடத்திற்கு முக்கிய பங்கு உண்டு ஆசிரியர் விஞ்ஞான பாடத்தை திறம்பட கற்பித்து சிறந்ததொரு மாணவ சமுதாயத்தை உருவாக்கியுள்ளார்
“கல்வி தொடர்பான சமூக இடைவெளியுடன் கூடிய திட்டமிடல்களும் கலந்துரையாடல்களும்”
Covid-19 நோய் நிலைகளின் காரணமாக கல்வி முன்னெடுத்தல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் பாடசாலை தொடர்ந்தும் செயற்படவேண்டிய தேவைபாட்டில் உள்ளது. இவை தொடர்பான திட்டமிடல்களை ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும் ஒத்துழைப்புடன் கல்லூரி முன்னெடுத்துச் செல்கின்றது. இன்றைய தினம் மாணவர்களது கல்வி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வினவுகின்ற வகையில் தந்தை செல்வா அரங்கில்சமூக இடைவெளியை பேணி மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கலந்துரையாடினார்.
“பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்கிவைப்பு”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு K. முத்துக்குமார் ( பிரான்ஸ்) அவரது தாயாரின் நினைவாக பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக இலங்கை முழுவதுமாக உள்ள பாடசாலைகளுக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை ( கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இலவசமாக வழங்கினார். அந்த வகையில் 19.01.2021 அன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் வினாத்தாள்கள் வழங்குகின்ற நிகழ்வு கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. வழங்கி
“The emblem of our college opening ceremony”
The emblem of our college of majesty and honor was displayed in a very majestic manner in the romaine hall of our college in the pre-1990s. The Romain Hall was completely destroyed in the ensuing war. After that, only the small emblem of the college was fitted. Mr. Muralitharan, an alumnus of our college
“சாதனையாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் கௌரவிப்பு விழா”
மத்திய கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்ந்த இலக்குகளை சாதனைகளாக மாற்றுகின்ற மாணவர்களை கௌரவித்து வாழ்த்துவதன் மூலம் மேலும் சாதனை வீரரை உற்சாகப்படுத்துவதோடு தொடர்ந்து முனைப்போடு இயங்குகின்ற ஏனைய மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுகின்ற தூண்டலை மத்திய கல்லூரி சிறப்பாக முன்னெடுக்கின்றது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்து தனது திறனை வெளிப்படுத்திய செல்வன்.விஜயகாந்த் வியாஸ்காந்த் அவர்ளையும் அவரது பெற்றோர்களையும் கௌரவித்து வாழ்த்துவதற்காக எமது கல்லூரி இன்று விழாக்கோலம் பூண்டது. கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ் கே எழில்வேந்தன்
- Published in Achievement, Gallery, News, Sports
இணையத்தளம் மீள் அறிமுக விழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது jcc.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மீண்டும் சமூகத்துடன் பொதுவெளியில் இணைவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது… 14.01.2021 இன்றைய தினம் பாடசாலை அதிபரின் தலைமையில் இணையத்தளம் மீள் அறிமுக விழா இடம்பெற்றது. தொடர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணையத்தளத்தின் செல் நெறி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி உப அதிபர்கள் பகுதித் தலைவர்கள் இணைய துறை சார்ந்த வடிவமைப்பாளர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- Published in Achievement, Gallery, News
Grade 5 Scholarship Achievements 2017 – 2020
ஆண்டு 2017 2018 2019 2020 வெட்டுப்புள்ளிக்கு மேல் 18% 16% 20% 9% 100 புள்ளிக்கு மேல் 69% 74% 60% 54% 70 சித்திப்புள்ளிக்கு மேல் 93% 98% 92% 91%
Pongal Vizha – 2021
தனக்கே உரித்தான பண்பாட்டு மரபுரிமைகளுடன் தமிழர் பண்பாடுகளில் அறிவியல் சார்ந்த நோக்கை முதன்மைப்படுத்தும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வருடாந்தம் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது மரபு. அதன்பால் 2021 ஆம் ஆண்டு மனமகிழ்ச்சிக்கான மாற்றத்தை உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விவசாயத்தின் உன்னத பெறுமானத்தையும், மன மகிழ்ச்சியையும் மாணவர்களினூடாக சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் பொங்கல் விழாவினை மத்திய கல்லூரிஅழகாக சிறப்பித்துக் கொண்டிருக்கின்றது.
வெற்றியின் படிக்கட்டில் மத்தியின் வீரன்
நீண்டகால துடுப்பாட்ட வரலாற்றினைக் கொண்ட எமது மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக செல்வன் விஜயகாந்த் வியாஸ்காந் அவர்கள் திகழ்கின்றார். இவர் 13 வயதுப் பிரிவில் இருந்தே எமது கல்லூரியில் விளையாடி வருகின்றார். அந்த வகையில் இவர் தன்னுடைய துடுப்பாட்ட விளையாட்டினை 2014 ஆம் ஆண்டு எமது கல்லூரியில் ஆரம்பித்தார். இவர் விளையாடிய காலப்பகுதியில் இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்ட போட்டியில் எமது கல்லூரி கால் இறுதி வரை முன்னேறியது. அத்தோடு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் எமது
Photocopy Machine Donated by O/L 1978 & A/L 1981 Batch Students
எமது கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை மனமுவந்து அன்பளிப்பாக வழங்கிய O/L 1978 மற்றும் A/L 1981 பிரிவு பழைய மாணவர்களிற்கு பாடசாலை சமூகம் நன்றி பகிர்ந்து மகிழ்வடைகின்றது.
- Published in Gallery, News, Physical Recourse