2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் பெளதீக விஞ்ஞானப் பிரிவிலும், தொழில்நுட்பத் துறையில் உயிர்முறைத் தொழில்நுட்பவியல் பிரிவிலும் எமது கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில் கணிதத் துறையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் ஞானமூர்த்தி சூரியா என்ற மாணவன் 3 ஏ சித்தி பெற்றும், தொழில்நுட்பத் துறையில் உயிர்முறைத் தொழில்நுட்பவியல் பிரிவில் கிருபாகரன் ஹரிகரன் என்ற மாணவன் 3 ஏ சித்தி பெற்றும் யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இதற்குப் பல வழிகளிலும் நிதி ஒத்துழைப்பு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்திய “Edu Care” அமைப்பிற்கும், “London OBA”, மற்றும் “Colombo OBA” இற்கு கல்லூரி முதல்வர் ஆகிய நான் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.