வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 117வது கிரிக்கட் போட்டி 7ம்,8ம்,9ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகும்.
கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி இம்முறையும் வெற்றிபெறும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.
இந்த வருடத்தின் நடப்பு கிரிக்கெட் பருவகால பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மத்திய கல்லூரியின் பெறுபெறுகளும் வீரர்களினது தனிப்பட்ட பெறுதிகளும் சிறப்பாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு கல்லூரி அணிகளும் மோதுவதால் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
போட்டிகளை கண்டு களிக்குமாறு மாணவர்கள், பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்