
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது 2023.04.22 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணிக்கு றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
கல்லூரியின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவராக செல்வன்.சதானந்தன் வருண்சர்மா கல்லூரி முதல்வரால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிர்வாக சபை மாணவமுதல்வர்களுக்கும் முதல்வர் சின்னம் சூட்டி கௌரவித்தார்.
தொடர்ந்து சிரேஷ்ட மாணவ முதல்வருக்கான சின்னங்களை பிரதி அதிபர் சூட்டி கௌரவித்தார். கனிஷ்ட மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை கல்லூரியின் உபஅதிபர்களும் மற்றும் மாணவ ஒழுக்காற்றுகுழு ஆசிரியர்களும் சூட்டி கௌரவித்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கல்லூரி முதல்வர் வழங்கி மாணவ முதல்வர்களின் பணி முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவ முதல்வர் சபையின் பொறுப்பாசிரியரால் நன்றியுரை வழங்கப்பட்டது. கல்லூரி கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.