
அகில இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 19 வயதின்கீழ் துடுப்பாட்ட அணியினருக்கான பிரிவு 3 Aக்கான போட்டியில் எமது கல்லூரி அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பிரிவு 2 Bக்கு தரம் உயர்த்தப்பட்டதையிட்டு துடுப்பாட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 18.04.2023 அன்று காலை 7.30 மணிக்கு கல்லூரி முன்றலில் அதிபர் திரு.சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
சாதனையாளர்களான விளையாட்டு அணி வீரர்கள் அதிபர்> பிரதியதிபர். உபஅதிபர்களால் மாலையணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் மகத்தான ஆட்டச் செயற்பாடு போற்றப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வீரர்களை பொறுப்பாக வழிநடத்திச் சென்ற விளையாட்டுப் பொறுப்பாசிரியர். அணிப் பொறுப்பாசிரியர். பயிற்றுவிப்பாளர்களும் மாலையணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் வெற்றிக்காக உழைத்த விளையாட்டுத் துறையாசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் பாராட்டைப் பெற்றனர்.
இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பாக மாணவர்கள் வெற்றிபெற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கம். கொழும்பு பழைய மாணவர் சங்கம். லண்டன் பழைய மாணவர் சங்கம் என்பன அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.