யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு K. முத்துக்குமார் ( பிரான்ஸ்) அவரது தாயாரின் நினைவாக பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக இலங்கை முழுவதுமாக உள்ள பாடசாலைகளுக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை ( கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இலவசமாக வழங்கினார். அந்த வகையில் 19.01.2021 அன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் வினாத்தாள்கள் வழங்குகின்ற நிகழ்வு கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வழங்கி வைத்த பொன்மணி அறக்கட்டளை அமைப்பிற்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.