எமது மாணவர்களின் நன்மைக்காக பழுதடைந்து காணப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) இணைந்து – எமது பழைய மாணவரும், கடற்றொழி்ல் அமைச்சருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கமைய, கெளரவ அமைச்சர் அவர்களால் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஊடாக ரூபா 01.00 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கமைய ரூபா 1.45 மில்லியன் செலவில் மலசல கூடமானது மாணவர்களின் நன்மைக்காக நவீனமயப்படுத்தப்பட்டது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் மிகுதி நிதி வழங்கப்பட்டது.
மேற்படி புனரமைப்பு பணியினை கெளரவ அமைச்சர் அவர்கள் 2024. 08.03 ஆம் திகதி பார்வையிட்டார்.
இச் செயற்றிட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த கெளரவ அமைச்சர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், இத் திட்டத்தினை விரைவாக நடைமுறைப்படுத்த அயராது உழைத்த பழைய மாணவர் சங்க (PPA) உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நன்றிகள்.
இவ் மலசல கூடம் போல் ஏனைய மலசல கூடங்களையும் மாணவர்களின் நன்மைக்காக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எஸ். இந்திரகுமார் அதிபர்