யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தொழினுட்பப்பிரிவவுக்கான திறன் பலகைத் (Smart Panel) திறப்புவிழா 26.10.2023 அன்று காலை 7.40 மணியளவில் கல்லூரி முதல்வர் திரு.சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக நோதேன் சென்ரல் வைத்தியசாலையின் இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்களும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரிப் பிரார்த்தனைப்பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையை கல்லூரி முதல்வர் அவர்கள் நிகழ்த்தினார்கள்; தொடர்ந்து நோதேன் சென்ரல் வைத்தியசாலையின் இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்களால் கல்லூரி மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட திறன் பலகை சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறன்பலகையின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நோதேன் சென்ரல் வைத்தியசாலையின் இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்கள் தன்னியக்கி மூலம் திறன்பலகையினை இயக்கி ஆரம்பித்துவைத்தார்கள்.
தொடர்ந்து கல்லூரியின் நோர்வே பழைய மாணவன் திரு. S. சதீஸ்குமார் அவர்களால் கல்லூரி மாணவ முதல்வர் சபைக்கு வழங்கப்பட்டட மடிக்கணினி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சிரேஷ்ட மாணவத் தலைவனிடம் கணினி கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் தொடர்ந்து கல்லூரிக்காக இவற்றை வழங்கிய தொண்டு உள்ளங்களைப் பாராட்டும் முகமாக கொரவ அமைச்சர் அவர்கள் பாராட்டுரையை நிகழ்த்தினார். தொடர்ந்து இயக்குநர் Dr. P. கேசவராஜ் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இக்கௌரவிப்பை கௌரவ அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதற்கான ஏற்புரையை Dr. P. கேசவராஜ் அவர்கள் நிகழ்த்தினார்கள். நிகழ்வின் நிறைவாக நன்றியுரையினை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர ;திரு. பி. நிரோசானந் அவர்கள் வழங்கினார்கள்.