யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலையணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மேலைத்தேச வாத்ததிய இசையுடன் தந்தை செல்வா அரங்கிற்கு ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து கல்லூரி இறைவணக்கப்பாடலும் தொடர்ந்து ஆசிரியர்களால் ஆசிரிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ முதல்வரால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையுரை இடம் பெற்றது. அவர் தனது தலைமையுரையில் ஆசிரியர்களின் அர்பணிப்பானசேவையையும் தேவையையும் இத்தினம் அனுட்டிக்கபபடுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. ஆசிரியத்தொழிலின் மகத்துவத்தையும் மாண்பையும் எடுத்துரைத்து ஆசிரியர்களுக்கான ஆசியையும் வாழ்த்துக்களையும் வழங்கி மகிழ்வித்திருந்தார்.
ஆசிரியர் தின நிகழ்வுகளின் வரிசையில் இசையாசிரியர்கள் இணைந்து “நாளை நமதே” என்ற பாடலை இசைத்து மாணவர்களை உற்சாகமூட்டினர். ஆசிரியர்களைப் போற்றியும் வாழ்த்தியும் கவிதைகளும் பாடல்களும் பல இசைக்கப்பட்டன. தொடர்ந்து மூத்த தமிழாசிரியர் திரு.A.நவநீதன் அவர்கள்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலையணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மேலைத்தேச வாத்ததிய இசையுடன் தந்தை செல்வா அரங்கிற்கு ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து கல்லூரி இறைவணக்கப்பாடலும் தொடர்ந்து ஆசிரியர்களால் ஆசிரிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ முதல்வரால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையுரை இடம் பெற்றது. அவர் தனது தலைமையுரையில் ஆசிரியர்களின் அர்பணிப்பானசேவையையும் தேவையையும் இத்தினம் அனுட்டிக்கபபடுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. ஆசிரியத்தொழிலின் மகத்துவத்தையும் மாண்பையும் எடுத்துரைத்து ஆசிரியர்களுக்கான ஆசியையும் வாழ்த்துக்களையும் வழங்கி மகிழ்வித்திருந்தார்.
ஆசிரியர் தின நிகழ்வுகளின் வரிசையில் இசையாசிரியர்கள் இணைந்து “நாளை நமதே” என்ற பாடலை இசைத்து மாணவர்களை உற்சாகமூட்டினர். ஆசிரியர்களைப் போற்றியும் வாழ்த்தியும் கவிதைகளும் பாடல்களும் பல இசைக்கப்பட்டன. தொடர்ந்து மூத்த தமிழாசிரியர் திரு.A.நவநீதன் அவர்கள் தலைமையில் “இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவது ஆசிரியர்களா? சமூகமா?” எனும் பொருளில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றப் பேச்சாளர்களாக திரு.J.T.லெஸ்லி, திரு.M.மயூரன், திரு.T.அருட்குமரன், திரு.அசோக், திரு. T.கருணாகரன், திருமதி.L.சதீஸ்குமார், திரு.பிரதீபன் திரு. N.பிரதாப் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். மாணவர்களுக்கான நல்ல சிந்தனைகள் இப்பட்டிமன்றம் ஊடாக விதைக்கப்பட்டன. மாணவர்கள் முன் சிறந்த பட்டிமன்றம் ஒன்று நிகழ்த்திக்காட்டப்பட்டமையும் சிறப்புக்குரியதே.
ஆசிரியர் தினநிகழ்வின் விசேட அம்சமாக இம்முறை பெண்ணாசிரியர்களின் ஒயிலாட்டம் சபையைக் குதூகலிக்கவைத்தது. வயதுவேறுபாடின்றி பல ஆசிரியர்களும் தமது நடனத்திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயம். ஒயிலாட்டத்தைத் தொடர்ந்து கவியரங்கம் தமிழாசிரியர் திரு.B.சற்குணம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. “அன்றைய ஆசிரிய மாணவர்களும் இன்றைய ஆசிரிய மாணவர்களும்” எனும் தலைப்பில் அமைந்த கவியரங்கில் திருமதி.தி.தவநேசன், திருமதி.மீ.பாரதி, திரு.R.ஜனதன், திருமதி.வு.நசிகேதா ஆகிய ஆசிரியர்கள் கலந்து தமது கவியாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர். கவியரங்கைத் தொடர்ந்து ஆசிரியர் திரு. றஜித்குமார் அவர்கள் தலைமையில் இசையும் அசைவும் நாடகம் இடம்பெற்றது. இந்நாடகத்தில் திரு. றஜித்குமார், திரு. றொகான் விக்ரர், திரு. கிருஸாந்தன், திரு. கருணாகரன், திருமதி.N.அல்பின் ஆகியோர் பங்குபற்றி சபையை சிரிக்கவைத்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். ஆசிரியர்கள் திரு.கருணாகரன், திருமதி. A.ஜெபதாஸ், திரு மகேஸ்வரன் ஆகியோரின் பாடல்களும் ஆசிரியர்தினத்தை மெருகூட்டின. ஆசிரியர் வட்டச் செயலாளரின் ஏற்புரை நன்றியுரை, மதியபோசனத்துடன் ஆசிரியர் தின விழாக்கள் சிறப்புற நிறைவுபெற்றன.