வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 208 ஆவது ஸ்தாபகர் தினமும் பரிசில் விழாவும் 2024.08.01 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது.யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாடசாலையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளங்குகின்றது. 1816 ஆம் ஆண்டு வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் லிஞ் அவர்களால் ‘யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை’ எனும் பெயரில் உருவாக்கப்பட்டது 1834 ஆம் ஆண்டில் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் இதன் பெயர் ‘யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை’ என மாற்றப்பட்டது. யாழ்நகரின் மத்தியில் விளங்கும் எங்கள் பாடசாலையான இக்கல்லூரி தேசிய பாடசாலையாக பல சாதனை வீரர்களை உருவாக்கி பெயர் பெற்று மிளிர்கின்றது.
ஸ்தாபகர் தினத்தின் முதல் அங்கமாக காலை 7.30 மணிக்கு வெஸ்லியன் மெதடிஸ்த திருச்சபையில் சிறப்பு வழிபாடு இடம் பெற்றது. திருச்சபையின் ஆலய குரு முதல்வர் வணக்கத்துக்குரிய ஞானரூபன் அவர்களின் இறையாசிவரும் வன பிதா S.P நேசகுமார் அவர்களின் அருளாசிகளும் இடம்பெற்றன. இருவரின் ஆசிகளிலும் கல்லூரி உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதன் பணிகளும் விளக்கப்பட்டன. இனமதம் கடந்து அனைவரையும் கல்வி புகட்டிய கல்லூரியின் தூரநோக்கு சிறப்பாக சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்து கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றது. கல்லூரி அதிபர்> பிரதி உப அதிபர்கள்> ஆசிரியர்கள்> பழைய மாணவர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மாணவ முதல்வர்கள் அனைவரும் கலந்து வழிபாட்டினை மேற்கொண்டனர்.
வழிபாட்டினை தொடர்ந்து ஸ்தாபகர் வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் ‘லிஞ்’ அவர்களின் திருவுருவத்திற்கு மாலை சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது கல்லூரி முதல்வர் திரு சி.இந்திரகுமார் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலித்தர்.
காலை 9 மணிக்கு தந்தை செல்வா அரங்கில் பரிசில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாயின. ஸ்தாபகரின் திருவுரு முன்னிலையில் மேலைத்N;தய வாத்திய இசையுடன் பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்கள் பாடசாலை சமூகத்தினரால் அழைத்து செல்லப்பட்டனர். மங்கல விளக்கேற்றல் கல்லூரி பிரார்த்தனை பாடல்களைத் தொடர்ந்து கல்லூரி இசை மாணவர்களால் வரவேற்பு பாடல் இசைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் கரைச்சி பிரதேச செயலருமான திரு.தவச்செல்வம் முகுந்தன் அவர்கள். மாணவர்களுக்கான பரிசீல்களை வழங்கி மகிழ்வித்திருந்தர் திருமதி.ரூபகௌரி முகுந்தன் அவர்கள். சிறப்பு விருந்தினராக Sun Shine Tea(Pvt) நிறுவனத்தின் உதவி முகாமையாளரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு P.விஜயனந்தன் அவர்கள். 1995 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர அணியில் கல்வி பயின்ற 1998 ஆம் ஆண்டு உயர்தரம் கற்ற மத்திய கல்லூரி மாணவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதோடு மூன்று இலட்சத்திற்கும் அதிகமான நிதியுதவியினை பரிசில் விழாவுக்காக வழங்கி கல்லூரியை பெருமைப்படுத்தியிருந்தனர்.
கல்லூரியின் கல்வி இணைப்பாட விதான செயற்பாட்டு அறிக்கைகளும் கல்லூரிக்கு கிடைக்கின்ற பழைய மாணவர் சங்க உதவிகளும் அதிபர் அறிக்கையில் முன்வைக்கப்பட்டன. கல்லூரியின் உயர்வுக்காகவும் மாணவர் நலனுக்காகவும் முன்னெடுக்கப்படும் விசேட திட்டங்கள் செயற்பாடுகள் வெளிக்காட்டப்பட்டதுடன் சாதனை புரிய பல வகையிலும் உதவிய பொறுப்பாசிரியர்கள் பிரதி உப அதிபர்கள் பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் சிறப்பாக பழைய மாணவர்கள் அனைவருக்கும் அதிபர் அவர்கள் மனதார நன்றிகளை தெரிவித்திருந்தர்
அதிபர் அறிக்கையினை தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன வருடா வருடம் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் தங்க பதக்கத்திற்கான தமிழ் ஆங்கில பேச்சுப் போட்டியில் இவ்வருடம் வெற்றி பெற்ற மாணவர்களின் ‘உரை’ இடம்பெற்றது தமிழ் பேச்சுப்போட்டியில் செல்வன் A .டினிஸ் அவர்களும் ஆங்கில பேச்சுப் போட்டியில் செல்வன் T.Isreal அவர்களும் சிறப்பான உரையை ஆற்றி சபையின் கரகோஷத்தை பெற்றுக்கொண்டனர்.
வகுப்பறை கற்றலுக்கான பரிசல்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பரிசீல்கள் பெருவிளையாட்டு தடகள விளையாட்டுக்கான பரிசல்கள் மன்றங்கள் கழகங்களில் தன்னார்வ சேவைகளுக்கான பரிசில்கள் சிறந்த மாணவர்களுக்கான பரிசில்கள் என மாணவர்களுக்கான பரிசில் வாய்ப்புகள் கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றை பெற்று மகிழ்ந்தனர்.
நீண்ட நேர பரிசளிப்பை தொடர்ந்து பிரதமர் விருந்தினரின் உரை இடம்பெற்றது. தான் கற்ற காலத்தில் இந்த மேடை தன்னை வளர்த்துவிட்டதையும் அவ்வேளை தனக்கு கற்பித்த ஆசான்களையும் நினைந்து வாழ்த்தி வணங்கி நன்றி கூறியதோடு இக்காலத்திலும் மாணவர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக வளர்த்து கல்விபோதிக்கும் கல்லூரியின் தலைமைத்துவத்தை பாராட்டியிருந்தர்.
அத்தோடு அத்தலைமைத்துவத்துக்கு என்றும் ஒத்துழைப்பு வழங்கும் கல்லூரி சமூகத்தையும் பாராட்டி நன்றிகளையும் தெரிவித்தர். நன்றியுரைடன் பரிசில் நிகழ்வுகள் நிறைவுற்றன. விருந்தினர்கள் ஆசிரியர்கள் மாணவர் முதல்வர்களுக்கான மதிய போஷன விருந்தும் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.