கல்லூரி முதல்வரின் தலைமை உரையின்போது , யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எமது மாணவர்களுக்கு விளையாட்டுத் திறனை உச்ச அளவில் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் தரமான முறையில் செய்து கொடுத்துள்ளது. குறிப்பாக செல்வன் வியாஸ்காந்த் கடந்த 7 ஆண்டுகளாக பாடசாலையின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டதுடன் இலங்கை முழுவதும் பிரபல பாடசாலை அணிகளுடன் விளையாடி பயிற்சியையும் பெறுமதியான அனுபவத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். எம்முடைய விளையாட்டுத்துறையின் சகல மாணவர்களையும் ஒரே பார்வையுடன் சமமான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் விடாமுயற்சியும் தனித்திறனும் உள்ள மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்துகின்றனர் என்று கூறியதுடன் தொடர்ந்தும் கிரிக்கெட் விளையாட்டின் சாதனையாளர்களை அதிகரிக்க வேண்டுமாயின் எம்முடைய கிரிக்கெட் விளையாட்டு திடலில் பெறும் பயிற்சி நெறியுடன் மேலதிகமாக கிரிக்கெட் விளையாட்டுக்கு உரித்தான தரையில் (Turf) பயிற்சிகளை பெற்றுக்கொள்வார்களாக இருந்தால் அதிகப்படியான வியாஸ்காந்த் போன்ற சாதனையாளர்கள் இக்கல்லூரியில் உருவாக்கப்படுவார்கள் என்று கூறியதுடன் தொடர்ந்தும் அவருடைய வெற்றி பயணம் உலக அரங்கில் பிரகாசிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.