Major Clubs க்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் டி20 சுற்றுப்போட்டியில், கொழும்பு Tamil Union கழகத்திற்காக தன் இரண்டாவது போட்டியில் விளையாடும் யாழ் மத்திய கல்லூரியின் தீசன் விதூசன்,
இன்றைய Negombo Cricket Clubற்கு எதிராக சற்று முன்பு முடிவடைந்த போட்டியில் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.!
முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் 20 ஓவர்களில் 147 ஓட்டங்களை ஒன்பது விக்கட்டுகளை இழந்து பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Negombo Cricket Club, சகல விக்கட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றது. இரண்டாவது ஓவரில் பந்துவீச ஆரம்பித்த தீசன் விதூசன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றினார். டி20 இல் இவரது கன்னி ஐந்துவிக்கட் பெறுதி இதுவாகும். அதுவும் தன் மூன்றாவது டி20யிலேயே பெற்றிருப்பது சிறப்பானது!
தன் முதல் ஓவரில் முன்னாள் இலங்கை அணி வீரர் டில்ஷான் முனவீர ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரியுடன் விதூசனை வரவேற்றிருந்தாலும், ஓவரின் இறுதிப் பந்தில் விதூசனிடமே ஆட்டமிழந்தார்.
பின் ஐந்தாவது ஓவரை வீசிய விதூசன் இரண்டு விக்கட்டுகளை அந்த ஓவரில் சாய்த்தார். அதில் ஒருவர் இன்னொரு முன்னாள் இலங்கை வீரர் மாலிந்த சிறீவர்த்தன. மற்றையவர் முனவீரவுடன் ஓபின் செய்த கேஷான் வன்னியாராச்சி.!
Top 8 இல் ஐவர் தீசனிடம் ஆட்டமிழந்தனர். தமிழ் யூனியனுக்கு இலகு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் தீசன் விதூசன்!
https://m.youtube.com/watch?v=JDYmhdYSB30&t=216s&pp=ygUKdXRoYXlhbiB0dg%3D%3D