2023 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் இலவச சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு 29.03.2023 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் காலை 10.30க்கு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் கௌரவ அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக வடமாகான கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்து.இராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து சிறப்பித்த விருந்தினர்கள் மாணவர்களுக்கு இலவச பாடநூல், இலவச சீருடையின் நோக்கங்களையும் அவற்றின் முக்கியத்துவங்களையும் வலியுறுத்தி தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கத்தின் நோக்கத்தையும் விளக்கி உரையாற்றினர்.தொடர்ந்து இலவச பாடநூல் சீருடைகளை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு கௌரவ அமைச்சர் அவர்கள் பாடசாலை பௌதீக வள அபிவிருத்திக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஒப்புதல் அளித்தார். மேலும் எமது கல்லூரி அதிபர் பாடசாலைக்கான சூரிய படலம்(Solar Panel) ஒன்றை அமைத்து தந்து மின்சாரக் கட்டணத்தினை மட்டுப்படுத்த உதவும்படி கௌரவ அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்து நிகழ்வை நிறைவு செய்தார்.