எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் சேவை என்பது இறை சக்திக்கு நிகராகப் போற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 33 வருடங்கள் ஆசிரிய சேவையை வழங்கி நிறைவாக பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்ற விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களை வாழ்த்தி இச்செய்தியினை வழங்குவதில் அகமகிழ்ந்து கொள்கின்றேன் மாணவனை வேலை உலகிற்கு ஆற்றுப் படுத்துவதில் விஞ்ஞான பாடத்திற்கு முக்கிய பங்கு உண்டு ஆசிரியர் விஞ்ஞான பாடத்தை திறம்பட கற்பித்து சிறந்ததொரு மாணவ சமுதாயத்தை உருவாக்கியுள்ளார் என்பது வெளிப்படை மத்திய கல்லூரியில் மூன்று வருடங்கள் சேவையாற்றி இருப்பினும் மாணவர்களிடத்தில் ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள ஆசிரியராக விளங்கியுள்ளார் ஆரவாரமில்லாமல் அமைதியாக தனது வேலையை சிறப்பாக நிறைவேற்றும் இவரது பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன் தனது நிறைந்த அனுபவத்தின் ஊடாக ஆசிரியர் பெற்றுக்கொண்ட பட்டறிவு தொடர்ந்தும் மாணவ சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும் என்பது எனது அவா. ஆசிரியரின் ஓய்வுக்காலம் மேம்பட்ட உடல், உள, சமூக, ஆன்மீக, மற்றும் ஆரோக்கியம் கொண்டதாக அமைவதற்கு ஆண்டவனின் அருளாசி வேண்டி பிரார்த்திக்கின்றேன்.
கல்லூரி முதல்வர்
கலாநிதி சி.க. எழில்வேந்தன்