யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிறசிக் கட்டடத் திறப்பு விழா 11.10.2023 அன்று கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சமூகத்துடன் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சமூகமும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடற் பயிற்சிக் கட்டடத் திறப்பு விழாவில் கௌரவ அமைச்சருடன் கல்வி அமைச்சின் செயலாளர் றனசிங்க பதில் செயலாளர் சமரக்கோன் அவர்களும் வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள்> பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பண்பாட்டுப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முகமாக தவில் நாதஸ்வர மங்கல வாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். முதலில் உடற்பயிற்சிக் கூட நினைவுக்கல் கௌரவ அமைச்சரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. தோடர்ந்து கௌரவ கல்வி அமைச்சர்> கௌரவ கடற்றொழில் அமைச்சர்களால் உடற்பயிற்சிக் கூட நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இம்முறை நடைபெற்ற பழுதூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் மத்திய கல்லூரி மாணவன்(20 வயதுக்குட்பட்ட) கு.வினிதன் அவர்களுக்கு கௌரவ அமைச்சர் அவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்கள். தொடர்ந்து மாகாண நிலையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற க.நந்துசன் அவர்களுக்கு கௌரவ கடற்றொழில் அமைச்சர் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி> யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவர்களின் மேலைத்தேய இசை முழங்க விருந்தினர்கள் தந்தை செல்வா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். கல்லூரி அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேம ஜயந்த அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. மாணவர்கள் செயன்முறை சார்ந்த கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கேற்ற வகையில் கல்வி மறுசீரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பற்றிக் குறிப்பிட்டார். மேலும் கலைப்பிரிவு மாணவர்கள் புவியியல் பாடத்தையும் சிறப்புப் பாடமாகக் கற்று உயர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
கல்லூயில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பல துறைத் தேவைகள் குறித்து கல்லூரி அதிபரினால்> கௌரவ கல்வி அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.